Google Driveவின் கூடுதல் சேவை விதிமுறைகள்

நடைமுறைக்கு வரும் தேதி: மார்ச் 31, 2020 (முந்தைய பதிப்பைக் காட்டு)

Google Driveவைப் பயன்படுத்த, (1) Google சேவை விதிமுறைகளையும் (2) இந்த Google Drive கூடுதல் சேவை விதிமுறைகளையும் (“Google Driveவின் கூடுதல் விதிமுறைகள்”) நீங்கள் ஏற்க வேண்டும்.

இந்த ஆவணங்கள் ஒவ்வொன்றையும் கவனமாகப் படிக்கவும். இந்த ஆவணங்கள் மொத்தமாக “விதிமுறைகள்” என்றழைக்கப்படுகின்றன. எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும்போது எங்களிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்பதையும் உங்களிடம் நாங்கள் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதையும் இவை தெளிவுபடுத்துகின்றன.

இது இந்த விதிமுறைகளின் ஒரு பகுதி இல்லையென்றாலும் உங்கள் தகவலை எப்படிப் புதுப்பிக்கலாம், நிர்வகிக்கலாம், ஏற்றலாம், நீக்கலாம் என்பதை நன்றாகப் புரிந்துகொள்ள எங்கள் தனியுரிமைக் கொள்கையைப் படிக்கும்படி பரிந்துரைக்கிறோம்.

1. உங்கள் உள்ளடக்கம்

Google Drive மூலம் நீங்கள் உள்ளடக்கத்தைப் பதிவேற்றலாம், சமர்ப்பிக்கலாம், சேமிக்கலாம், அனுப்பலாம், பெறலாம். Google சேவை விதிமுறைகளில் விளக்கியுள்ளவாறு உங்கள் உள்ளடக்கம் உங்களுக்கே சொந்தமானதாகும். உங்களுடைய Drive கணக்கில் நீங்கள் பதிவேற்றும், பகிரும் அல்லது சேமிக்கும் உரை, தரவு, தகவல், கோப்புகள் ஆகியவை உள்ளிட்ட எந்த உள்ளடக்கத்துக்கும் நாங்கள் உரிமைகோர மாட்டோம். Google சேவை விதிமுறைகள் Google Drive சேவைகளைச் செயல்படுத்துவது, மேம்படுத்துவது ஆகியவற்றுக்கான வரம்புக்குட்பட்ட உரிமத்தை Googleளுக்கு வழங்குகிறது. ஆகவே நீங்கள் ஓர் ஆவணத்தை வேறு ஒருவருடன் பகிர முடிவுசெய்தால் அல்லது வேறு ஒரு சாதனத்தின் மூலம் அந்த ஆவணத்தைத் திறக்க விரும்பினால் நாங்கள் அதற்கான செயல்பாடுகளை வழங்குவோம்.

Google Drive மூலம் நீங்கள் பிற Google Drive பயனர்களின் உள்ளடக்கத்திலும் கூட்டுப்பணி செய்யலாம். அந்த உள்ளடக்கத்தின் “உரிமையாளர்” மட்டுமே உள்ளடக்கத்தையும் அதன் உபயோகத்தையும் கட்டுப்படுத்த முடியும்.

Google Driveவில் உங்கள் உள்ளடக்கத்தைப் பிறர் எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை Google Driveவில் உள்ள பகிர்தல் அமைப்புகள் மூலம் கட்டுப்படுத்தலாம். உங்கள் கோப்புகளின் தனியுரிமை அமைப்புகள் அவை இருக்கும் கோப்புறை அல்லது இயக்ககத்தைப் பொறுத்தே அமையும். உங்கள் தனிப்பட்ட இயக்ககத்தில் உள்ள கோப்புகள் நீங்கள் பகிரும் வரை தனிப்பட்டவையாக இருக்கும். உள்ளடக்கத்தை நீங்கள் பகிரலாம், அதன் கட்டுப்பாட்டைப் பிறருக்கு மாற்றலாம். பிறர் பகிரும் கோப்புறைகள்/இயக்ககங்களில் நீங்கள் உருவாக்கும் அல்லது வைத்திருக்கும் கோப்புகள், அவை இருக்கும் கோப்புறை/இயக்ககத்தின் பகிர்தல் அமைப்புகளைப் பெறுவதோடு அதன் உரிமை அமைப்புகளையும் பெறக்கூடும். எங்களது தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ள விதம் தவிர்த்து, வேறு விதங்களில் உங்களது கோப்புகளையும் தரவையும் நாங்கள் பிறருடன் பகிர்ந்துகொள்ள மாட்டோம்.

உங்கள் உள்ளடக்கத்தை மார்க்கெட்டிங் அல்லது விளம்பரப் பிரச்சாரங்களுக்காகப் பயன்படுத்த மாட்டோம்.

2. திட்டக் கொள்கைகள்

உள்ளடக்கம் சட்ட விரோதமானதா அல்லது எங்களின் திட்டக் கொள்கைகளை மீறுகிறதா என்பதைத் தீர்மானிக்க அதை நாங்கள் மதிப்பாய்வு செய்யக்கூடும், மேலும் எங்கள் கொள்கைகளையோ சட்டத்தையோ மீறுவதாக நாங்கள் கருதும் உள்ளடக்கத்தை அகற்றக்கூடும் அல்லது காட்சிப்படுத்த மறுக்கக்கூடும். எனினும் நாங்கள் உள்ளடக்கத்தை மதிப்பாய்வு செய்வோம் என்பதற்கு உத்திரவாதம் எதுவும் இல்லை, எனவே அவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டாம்.