முகப்புAUD / HKD • நாணயம்
add
AUD / HKD
முந்தைய குளோசிங்
5.13
சந்தைச் செய்திகள்
ஆஸ்திரேலிய டாலர் குறித்த விவரங்கள்
அவுஸ்திரேலிய டொலர் 1966 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 முதல் அவுஸ்திரேலியாவின் நாணயமாக பாவனையில் உள்ளது. இங்கு மட்டுமல்லாமல் கிரிபட்டி, நவுரு, டுவாலு, கிறிஸ்மஸ் தீவுகள், கோகொஸ் தீவுகள், நோர்போக் தீவுகள் ஆகிய நாடுகளிலும் இது புழக்கத்தில் உள்ளது. வழமையாக $ குறீயீட்டால் குறிக்கப்படும். சிலவேளைகளில் AUD அல்லது A$ எனும் குறியீடுகளாலும் குறிக்கப்படும். 1 டொலர் 100 சதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் அதிகமாக மாற்றஞ் செய்யப்படும் பணங்களில் பட்டியலில் ஆறாவது இடத்திலுள்ளது Wikipediaஹாங்காங் டாலர் குறித்த விவரங்கள்
ஹொங்கொங் டொலர் அல்லது ஹாங்காங் டாலர் என்பது ஹொங்கொங்கில் புழக்கத்தில் உள்ள நாணயமாகும். சட்ட அதிகாரத்திற்கு அமைய ஹொங்கொங் நாணயத்தின் நாணயக்குறி, சுருக்கக்குறி: ஆகும். ஹொங்கொங் டொலர் உலகில் அதிக வணிகப் புழக்கத்தில் உள்ள நாணயங்களில் ஒன்பதாவது நிலையில் உள்ளது. ஆங்கிலத்தில் இதன் சுருக்கக் குறியீடாக, அமெரிக்க நாணயத்தின் சுருக்கக்குறியீட்டையே பயன்படுத்தப்படுகின்றது; அதேவேளை மாற்றீடாக ஆங்கில எழுத்துக்கள் "HK" உடன் இணைத்து எனவும் பயன்படுத்தப்படுகின்றது. ஒரு ஹொங்கொங் டொலர் என்பது நூறு ஹொங்கொங் சதங்களைக் கொண்டதாகும்.
அமெரிக்க டொலர் ஒன்றிற்கான ஹொங்கொங் டொலரின் பெறுமதி HK$ 7.80 ஆகும். Wikipedia