முகப்புAUD / KZT • நாணயம்
add
AUD / KZT
முந்தைய குளோசிங்
324.13
சந்தைச் செய்திகள்
ஆஸ்திரேலிய டாலர் குறித்த விவரங்கள்
அவுஸ்திரேலிய டொலர் 1966 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 முதல் அவுஸ்திரேலியாவின் நாணயமாக பாவனையில் உள்ளது. இங்கு மட்டுமல்லாமல் கிரிபட்டி, நவுரு, டுவாலு, கிறிஸ்மஸ் தீவுகள், கோகொஸ் தீவுகள், நோர்போக் தீவுகள் ஆகிய நாடுகளிலும் இது புழக்கத்தில் உள்ளது. வழமையாக $ குறீயீட்டால் குறிக்கப்படும். சிலவேளைகளில் AUD அல்லது A$ எனும் குறியீடுகளாலும் குறிக்கப்படும். 1 டொலர் 100 சதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் அதிகமாக மாற்றஞ் செய்யப்படும் பணங்களில் பட்டியலில் ஆறாவது இடத்திலுள்ளது Wikipediaகஸகஸ்தானி டென்கே குறித்த விவரங்கள்
டெங்கே கசக்ஸ்தான் நாட்டின் நாணயம். கசக்ஸ்தான் 1991 வரை சோவியத் யூனியனின் ஓரங்கமாக இருந்தது. அப்போது சோவியத் ரூபிள் நாணய முறையே கசாக் குடியரசிலும் புழக்கத்திலிருந்தது. 1991ல் சோவியத் யூனியன் சிதறியதும், கசக்ஸ்தான் சுதந்திர நாடானாலும், 1993 வரை ரஷ்ய ரூபிள் நாணய முறையே அங்கு புழக்கத்த்லிருந்தது. 1993ல் டெங்கே என்ற புதிய நாணயம் அறிமுகபடுத்தப்பட்டது. டெங்கே என்ற சொல்லுக்கு கசாக் மொழியில் “தராசு” என்று பொருள். ஒரு லாரியில் 100 டியன்கள் உள்ளன. 2007ல் டெங்கேவிற்கு T̅ என்ற புதிய சின்னம் அறிமுகப்படுத்தப்படது. டெங்கே என்ற சொல்லிற்கு தனியே பன்மை வடிவம் கிடையாது.
1000 tenge commemorative banknote for 2010 year - the Chairmanship of Kazakhstan in OSCE Wikipedia