முகப்புAUD / RON • நாணயம்
add
AUD / RON
முந்தைய குளோசிங்
3.10
சந்தைச் செய்திகள்
ஆஸ்திரேலிய டாலர் குறித்த விவரங்கள்
அவுஸ்திரேலிய டொலர் 1966 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 முதல் அவுஸ்திரேலியாவின் நாணயமாக பாவனையில் உள்ளது. இங்கு மட்டுமல்லாமல் கிரிபட்டி, நவுரு, டுவாலு, கிறிஸ்மஸ் தீவுகள், கோகொஸ் தீவுகள், நோர்போக் தீவுகள் ஆகிய நாடுகளிலும் இது புழக்கத்தில் உள்ளது. வழமையாக $ குறீயீட்டால் குறிக்கப்படும். சிலவேளைகளில் AUD அல்லது A$ எனும் குறியீடுகளாலும் குறிக்கப்படும். 1 டொலர் 100 சதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் அதிகமாக மாற்றஞ் செய்யப்படும் பணங்களில் பட்டியலில் ஆறாவது இடத்திலுள்ளது Wikipediaரோமானியன் லியூ குறித்த விவரங்கள்
லியு ரொமேனியா நாட்டின் நாணயம் ஆகும். இது 1867 இல் முதன் முதலில் அறிமுகப்படுத்தப் பட்டது. அன்று முதல் இன்று வரை நான்கு முறை ரொமேனிய நாட்டில் புதிய நாணயமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவை அனைத்தும் லியு என்றே அழைக்கப்பட்டன. தற்போஹ்டு புழக்கத்திலுள்ள லியு 2005ல் அறிமுகப்படுத்தப்பட்டது. ரொமேனியா ஜனவரி 1, 2007 ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்து விட்டதால் 2014ம் ஆண்டு லியு நாணய முறை கைவிடப்பட்டு யூரோ ரொமேனியாவின் நாணயமாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லியூ என்ற சொல்லுக்கு ரொமேனிய மொழியில் “சிங்கம்” என்று பொருள். இதன் பன்மை வடிவம் ”லெய்”. ஒரு லியுவில் 100 பனிக்கள் உள்ளன. Wikipedia