முகப்புCAD / CNY • நாணயம்
add
CAD / CNY
முந்தைய குளோசிங்
5.30
சந்தைச் செய்திகள்
கனடியன் டாலர் குறித்த விவரங்கள்
கனடா டொலர் கனடாவின் நாணயம் ஆகும். 2011 ஆம் ஆண்டின் கணக்கின்படி, கனேடிய டோலர் அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஏழாவது நாணயம் ஆகும். இது நூறு செண்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இது கனேடிய வங்கியினால் அச்சடிக்கப்படுகிறது. கனடா முழுவதும் இப்பணம் செல்லுபடியாகும் எனினும் அருகிலுள்ள பியரி மற்றும் மகுலின் தீவுகளும் பயன்படுத்துகின்றன. னித இது 1858ம் ஆண்டில் இருந்து நடைமுறையில் இருக்கின்றது. இதை சுருக்கமாக $ அல்லது C$ குறியீட்டை பயன்படுத்தி குறிப்பர். "CAD", "CAD$", "CA$", "Can$" போன்ற குறியீடுகளும் பயன்படுத்தப்படுவதுண்டு. பணம் மட்டுமின்றி, 1, 2, 5, 10, 25, 50 செண்டுகளும் அச்சடிக்கப்படுகின்றன. Wikipediaசீன யுவான் குறித்த விவரங்கள்
ரென்மின்பி அல்லது ஆர்.எம்.பி., என்னும் மக்களின் நாணயம் சீன மக்கள் குடியரசின் நாணயம் ஆகும். ஒரு யுவான், 10 ”ஜியாவோ”க்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஜியாவோ, 10 சீன
ஃபென்களுக்குச் சமம். ரென்மின்பி பணம், ஒரு ஜியாவோவில் தொடங்கி, 100 யுவான் வரையில் உள்ளது. காசுகள் ஒரு ஃபென்னில் டொடங்கி ஒரு யுவான் வரையிலும் அச்சடிக்கப்படுகின்றன. ரென்மின்பி நாணயம், சீனாவில் மட்டுமே செல்லுபடியாகும். ஹாங்காங், சீனக் குடியரசு, மக்காவு பகுதிகளில் செல்லுபடியாகாது. ஆயினும், ஆங்காங், மக்காவு பகுதிகளில் ஏற்கப்பட்டு, வங்கிகளில் கணக்கு வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். 2005 ஆம் ஆண்டுவரையில், அமெரிக்க டாலருக்கு இணையாக மாற்றப்பட்டது. திட்டமிட்ட பொருளாதாரத்தின் காரணமாக, சீனப் பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது. Wikipedia