முகப்புCAD / DKK • நாணயம்
add
CAD / DKK
முந்தைய குளோசிங்
4.99
சந்தைச் செய்திகள்
கனடியன் டாலர் குறித்த விவரங்கள்
கனடா டொலர் கனடாவின் நாணயம் ஆகும். 2011 ஆம் ஆண்டின் கணக்கின்படி, கனேடிய டோலர் அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஏழாவது நாணயம் ஆகும். இது நூறு செண்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இது கனேடிய வங்கியினால் அச்சடிக்கப்படுகிறது. கனடா முழுவதும் இப்பணம் செல்லுபடியாகும் எனினும் அருகிலுள்ள பியரி மற்றும் மகுலின் தீவுகளும் பயன்படுத்துகின்றன. னித இது 1858ம் ஆண்டில் இருந்து நடைமுறையில் இருக்கின்றது. இதை சுருக்கமாக $ அல்லது C$ குறியீட்டை பயன்படுத்தி குறிப்பர். "CAD", "CAD$", "CA$", "Can$" போன்ற குறியீடுகளும் பயன்படுத்தப்படுவதுண்டு. பணம் மட்டுமின்றி, 1, 2, 5, 10, 25, 50 செண்டுகளும் அச்சடிக்கப்படுகின்றன. Wikipediaடேனிஷ் க்ரோன் குறித்த விவரங்கள்
குரோன், டென்மார்க் நாட்டின் நாணயம். குரோன் என்ற் சொல்லுக்கு டானிய மொழியில் முடி/கிரீடம் என்று பொருள். இது ஐரோப்பிய ஒன்றியத்தின் நாணயமான யூரோவுடன் நாணய மாற்று மதிப்பு மாறாத நிலையில் வைக்கப்பட்டுள்ளது. குரோன் என்ற சொல்லின் பன்மை வடிவம் குரோனர். ஒரு குரோனில் 100 ஓர்கள் உள்ளன. இந்த நாணயம் டென்மார்க்கின் ஆட்சிப்பகுதிகளாகிய கிரீன்லாந்து மற்றும் பரோயே தீவுகளிலும் புழக்கத்தில் உள்ளது. பரோயே தீவுகளின் நாணயமான பரோயே குரோனாவும் டானிய குரோனும் சம மதிப்புடையவையாகக் கருதப்படுகின்றன. Wikipedia