முகப்புCAD / INR • நாணயம்
add
CAD / INR
முந்தைய குளோசிங்
61.08
சந்தைச் செய்திகள்
கனடியன் டாலர் குறித்த விவரங்கள்
கனடா டொலர் கனடாவின் நாணயம் ஆகும். 2011 ஆம் ஆண்டின் கணக்கின்படி, கனேடிய டோலர் அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஏழாவது நாணயம் ஆகும். இது நூறு செண்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இது கனேடிய வங்கியினால் அச்சடிக்கப்படுகிறது. கனடா முழுவதும் இப்பணம் செல்லுபடியாகும் எனினும் அருகிலுள்ள பியரி மற்றும் மகுலின் தீவுகளும் பயன்படுத்துகின்றன. னித இது 1858ம் ஆண்டில் இருந்து நடைமுறையில் இருக்கின்றது. இதை சுருக்கமாக $ அல்லது C$ குறியீட்டை பயன்படுத்தி குறிப்பர். "CAD", "CAD$", "CA$", "Can$" போன்ற குறியீடுகளும் பயன்படுத்தப்படுவதுண்டு. பணம் மட்டுமின்றி, 1, 2, 5, 10, 25, 50 செண்டுகளும் அச்சடிக்கப்படுகின்றன. Wikipediaஇந்திய ரூபாய் குறித்த விவரங்கள்
இந்தியாவின் நாணயம் இந்திய ரூபாய் என அழைக்கப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி இந்திய ரூபாயை வெளியிடுகிறது. INR என்பது இந்திய ரூபாயின் ஐஎஸ்ஓ 4217 குறியீடு.
ரிசர்வ் வங்கியால் ₹5, ₹10, ₹20, ₹50, ₹100, ₹500 வரையிலான ரூபாய் தாள்கள் அச்சடிக்கப்படுகின்றன. ஒரு ரூபாய் தாள்கள் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரையிலான நாணயங்களை வெளியிடும் அதிகாரம் இந்திய அரசுக்கு மட்டுமே உண்டு. உலோக நாணயங்கள் ₹1, ₹2, ₹5, ₹10 மற்றும் ₹20 வரையிலான மதிப்புகளில் வெளியிடப்படுகின்றன. ₹20 க்கு அதிகமான மதிப்புடைய நாணயங்கள் புகழ்வாய்ந்த நபர்களையோ அல்லது ஏதேனும் ஒரு நிகழ்வையோ குறிப்பிடும் வகையில் நினைவு நாணயங்களாக வெளியிடப்படுகின்றன. 50 பைசாவுக்கு குறைவான பைசா நாணயங்கள் தற்போது புழக்கத்தில் இல்லை. Wikipedia