முகப்புCAD / RSD • நாணயம்
add
CAD / RSD
முந்தைய குளோசிங்
78.63
சந்தைச் செய்திகள்
கனடியன் டாலர் குறித்த விவரங்கள்
கனடா டொலர் கனடாவின் நாணயம் ஆகும். 2011 ஆம் ஆண்டின் கணக்கின்படி, கனேடிய டோலர் அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஏழாவது நாணயம் ஆகும். இது நூறு செண்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இது கனேடிய வங்கியினால் அச்சடிக்கப்படுகிறது. கனடா முழுவதும் இப்பணம் செல்லுபடியாகும் எனினும் அருகிலுள்ள பியரி மற்றும் மகுலின் தீவுகளும் பயன்படுத்துகின்றன. னித இது 1858ம் ஆண்டில் இருந்து நடைமுறையில் இருக்கின்றது. இதை சுருக்கமாக $ அல்லது C$ குறியீட்டை பயன்படுத்தி குறிப்பர். "CAD", "CAD$", "CA$", "Can$" போன்ற குறியீடுகளும் பயன்படுத்தப்படுவதுண்டு. பணம் மட்டுமின்றி, 1, 2, 5, 10, 25, 50 செண்டுகளும் அச்சடிக்கப்படுகின்றன. Wikipediaசெர்பியன் தினார் குறித்த விவரங்கள்
செர்பிய தினார் செர்பியா நாட்டின் நாணயம். தினார் என்ற பெயர்கொண்ட நாணய முறை கி.பி. 1214ம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்டது. ஒட்டோமான் பேரரசு செர்பியாவைக் கைப்பற்றியபின் நவீன தினார் நாணய முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 1920ல் செர்பிய தினாருக்கு பதில் யுகோஸ்லாவிய தினார் புழக்கத்துக்கு வந்தது. அன்று முதல், 1941-44ல் நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் செர்பியா இருந்த ஒரு குறுகிய காலகட்டத்தைத் தவிர 2003 வரை யுகோஸ்லாவிய தினாரே செர்பியாவின் நாணயமாக இருந்தது. 1990களில் யுகோஸ்லாவியா சிதறியதால் பிரிந்து போன ஒவ்வொரு நாடும் தனியே நாணய முறைகளை அறிமுகப்படுத்திக் கொண்டன. இறுதியில் மிஞ்சியிருந்த செர்பியாவும் 2003ல் செர்பிய தினார் முறையை அறிமுகப்படுத்தியது. ஒரு தினாரில் 100 பாராக்கள் உள்ளன. அதிகாரப்பூர்வமாக “RSD" என்ற குறியீடும் நடைமுறையில் “din” என்ற குறியீடும் இந்த நாணயத்தைக் குறிக்க பயன்படுத்தப்படுகின்றன. தினார் என்ற சொல்லின் பன்மை வடிவம் “தினாரா”. Wikipedia