முகப்புCAD / TRY • நாணயம்
add
CAD / TRY
முந்தைய குளோசிங்
24.20
சந்தைச் செய்திகள்
கனடியன் டாலர் குறித்த விவரங்கள்
கனடா டொலர் கனடாவின் நாணயம் ஆகும். 2011 ஆம் ஆண்டின் கணக்கின்படி, கனேடிய டோலர் அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஏழாவது நாணயம் ஆகும். இது நூறு செண்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இது கனேடிய வங்கியினால் அச்சடிக்கப்படுகிறது. கனடா முழுவதும் இப்பணம் செல்லுபடியாகும் எனினும் அருகிலுள்ள பியரி மற்றும் மகுலின் தீவுகளும் பயன்படுத்துகின்றன. னித இது 1858ம் ஆண்டில் இருந்து நடைமுறையில் இருக்கின்றது. இதை சுருக்கமாக $ அல்லது C$ குறியீட்டை பயன்படுத்தி குறிப்பர். "CAD", "CAD$", "CA$", "Can$" போன்ற குறியீடுகளும் பயன்படுத்தப்படுவதுண்டு. பணம் மட்டுமின்றி, 1, 2, 5, 10, 25, 50 செண்டுகளும் அச்சடிக்கப்படுகின்றன. Wikipediaதுருக்கிஷ் லீரா குறித்த விவரங்கள்
துருக்கிய லிரா துருக்கி நாட்டின் நாணயம். வட சைப்பிரசு நாட்டிலும் நாணயமாக பயன்படுத்தப்படுகிறது. லிரா 1844ல் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2005 வரை புழக்கத்திலிருந்த இந்த நாணயம் “முதல் லிரா” என்றழைக்கப்பட்டது. 2005ல் துருக்கி அரசு புதிய துருக்கிய லிரா என்ற புது நாணய முறையை உருவாக்கியது. இது “இரண்டாம் லிரா” என்றும் அழைக்கப்படுகிறது. முதல் லிரா மதிப்பு மிகக்குறைவாக இருந்தது இம்மாற்றத்துக்கு காரணம். ஒரு புது லிராவின் மதிப்பு பத்து லட்சம் முதல் லிராக்கள். 2008 துவக்கத்திலிருந்து முதல் லிரா புழக்கத்திலிருந்து விலக்கிக் கொள்ளப்பபட்டது. ஒரு லிராவில் 100 குருஸ்கள் உள்ளன. Wikipedia