முகப்புCNY / MKD • நாணயம்
add
CNY / MKD
முந்தைய குளோசிங்
7.96
சந்தைச் செய்திகள்
சீன யுவான் குறித்த விவரங்கள்
ரென்மின்பி அல்லது ஆர்.எம்.பி., என்னும் மக்களின் நாணயம் சீன மக்கள் குடியரசின் நாணயம் ஆகும். ஒரு யுவான், 10 ”ஜியாவோ”க்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஜியாவோ, 10 சீன
ஃபென்களுக்குச் சமம். ரென்மின்பி பணம், ஒரு ஜியாவோவில் தொடங்கி, 100 யுவான் வரையில் உள்ளது. காசுகள் ஒரு ஃபென்னில் டொடங்கி ஒரு யுவான் வரையிலும் அச்சடிக்கப்படுகின்றன. ரென்மின்பி நாணயம், சீனாவில் மட்டுமே செல்லுபடியாகும். ஹாங்காங், சீனக் குடியரசு, மக்காவு பகுதிகளில் செல்லுபடியாகாது. ஆயினும், ஆங்காங், மக்காவு பகுதிகளில் ஏற்கப்பட்டு, வங்கிகளில் கணக்கு வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். 2005 ஆம் ஆண்டுவரையில், அமெரிக்க டாலருக்கு இணையாக மாற்றப்பட்டது. திட்டமிட்ட பொருளாதாரத்தின் காரணமாக, சீனப் பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது. Wikipediaமாசிடோனியன் டேனார் குறித்த விவரங்கள்
மாசிடோனிய தெனார் அல்லது மாக்கடோனிய தெனார் மாசிடோனிய குடியரசின் நாணயம். 1992 வ்ரை மாசிடோனியக் குடியரசு யுகோஸ்லாவியாவின் ஒரு பகுதியாக இருந்தது. அப்போது யுகோஸ்லாவிய தினாரே மாசிடோனியாவின் நாணயமாக இருந்தது. 1990களில் யுகோஸ்லாவியா சிதறியதால் பிரிந்து போன ஒவ்வொரு நாடும் தனியே நாணய முறைகளை அறிமுகப்படுத்திக் கொண்டன. 1993ல் மாசிடோனியா மாசிடோனிய தெனார் நாணய முறையை அறிமுகப்படுத்தியது. ஒரு தெனாரில் 100 தெனிக்கள் உள்ளன. தெனார் என்ற சொல்லின் பன்மை வடிவம் “தெனாரி”. Wikipedia