முகப்புCNY / RSD • நாணயம்
add
CNY / RSD
முந்தைய குளோசிங்
14.78
சந்தைச் செய்திகள்
சீன யுவான் குறித்த விவரங்கள்
ரென்மின்பி அல்லது ஆர்.எம்.பி., என்னும் மக்களின் நாணயம் சீன மக்கள் குடியரசின் நாணயம் ஆகும். ஒரு யுவான், 10 ”ஜியாவோ”க்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஜியாவோ, 10 சீன
ஃபென்களுக்குச் சமம். ரென்மின்பி பணம், ஒரு ஜியாவோவில் தொடங்கி, 100 யுவான் வரையில் உள்ளது. காசுகள் ஒரு ஃபென்னில் டொடங்கி ஒரு யுவான் வரையிலும் அச்சடிக்கப்படுகின்றன. ரென்மின்பி நாணயம், சீனாவில் மட்டுமே செல்லுபடியாகும். ஹாங்காங், சீனக் குடியரசு, மக்காவு பகுதிகளில் செல்லுபடியாகாது. ஆயினும், ஆங்காங், மக்காவு பகுதிகளில் ஏற்கப்பட்டு, வங்கிகளில் கணக்கு வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். 2005 ஆம் ஆண்டுவரையில், அமெரிக்க டாலருக்கு இணையாக மாற்றப்பட்டது. திட்டமிட்ட பொருளாதாரத்தின் காரணமாக, சீனப் பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது. Wikipediaசெர்பியன் தினார் குறித்த விவரங்கள்
செர்பிய தினார் செர்பியா நாட்டின் நாணயம். தினார் என்ற பெயர்கொண்ட நாணய முறை கி.பி. 1214ம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்டது. ஒட்டோமான் பேரரசு செர்பியாவைக் கைப்பற்றியபின் நவீன தினார் நாணய முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 1920ல் செர்பிய தினாருக்கு பதில் யுகோஸ்லாவிய தினார் புழக்கத்துக்கு வந்தது. அன்று முதல், 1941-44ல் நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் செர்பியா இருந்த ஒரு குறுகிய காலகட்டத்தைத் தவிர 2003 வரை யுகோஸ்லாவிய தினாரே செர்பியாவின் நாணயமாக இருந்தது. 1990களில் யுகோஸ்லாவியா சிதறியதால் பிரிந்து போன ஒவ்வொரு நாடும் தனியே நாணய முறைகளை அறிமுகப்படுத்திக் கொண்டன. இறுதியில் மிஞ்சியிருந்த செர்பியாவும் 2003ல் செர்பிய தினார் முறையை அறிமுகப்படுத்தியது. ஒரு தினாரில் 100 பாராக்கள் உள்ளன. அதிகாரப்பூர்வமாக “RSD" என்ற குறியீடும் நடைமுறையில் “din” என்ற குறியீடும் இந்த நாணயத்தைக் குறிக்க பயன்படுத்தப்படுகின்றன. தினார் என்ற சொல்லின் பன்மை வடிவம் “தினாரா”. Wikipedia