முகப்புCNY / UAH • நாணயம்
add
CNY / UAH
முந்தைய குளோசிங்
5.68
சந்தைச் செய்திகள்
சீன யுவான் குறித்த விவரங்கள்
ரென்மின்பி அல்லது ஆர்.எம்.பி., என்னும் மக்களின் நாணயம் சீன மக்கள் குடியரசின் நாணயம் ஆகும். ஒரு யுவான், 10 ”ஜியாவோ”க்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஜியாவோ, 10 சீன
ஃபென்களுக்குச் சமம். ரென்மின்பி பணம், ஒரு ஜியாவோவில் தொடங்கி, 100 யுவான் வரையில் உள்ளது. காசுகள் ஒரு ஃபென்னில் டொடங்கி ஒரு யுவான் வரையிலும் அச்சடிக்கப்படுகின்றன. ரென்மின்பி நாணயம், சீனாவில் மட்டுமே செல்லுபடியாகும். ஹாங்காங், சீனக் குடியரசு, மக்காவு பகுதிகளில் செல்லுபடியாகாது. ஆயினும், ஆங்காங், மக்காவு பகுதிகளில் ஏற்கப்பட்டு, வங்கிகளில் கணக்கு வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். 2005 ஆம் ஆண்டுவரையில், அமெரிக்க டாலருக்கு இணையாக மாற்றப்பட்டது. திட்டமிட்ட பொருளாதாரத்தின் காரணமாக, சீனப் பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது. Wikipediaஉக்ரைனியன் ஹிரைவ்னியா குறித்த விவரங்கள்
ஹிருன்யா உக்ரைன் நாட்டின் நாணயம். இது 1996ல் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1990 வரை சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த உக்ரைனியின் சோவியத் ரூபிள் நாணயமுறையாக இருந்து வந்தது. சோவியத் யூனியன் சிதறி உக்ரைன் தனி நாடானபின் சிறிது காலம் ரூபிளே புழக்கத்திலிருந்தது. 1992ல் உக்ரைனிய கார்போவானெட்ஸ் என்ற புதிய நாணயமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் பணவீக்கம் அதிகமானதால 1996ல் புதிய நாணயமுறையாக ஹிருன்யா அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு லட்சம் கார்போவானெட்சுக்கு ஒரு ஹிருன்யா என்ற விகிதத்தில் புதிய நாணயமுறை புழக்கத்தில் விடப்பட்டது. ஹிருன்யா என்ற சொல்லின் பன்மை வடிவம் ஹிருன்யி. ஒரு ஹிருன்யாவில் 100 கோப்பியோக்கி உள்ளன. Wikipedia