முகப்புCZK / RON • நாணயம்
add
CZK / RON
முந்தைய குளோசிங்
0.20
சந்தைச் செய்திகள்
செக் குடியரசு கொருனா குறித்த விவரங்கள்
செக் கொருனா செக் குடியரசு நாட்டின் நாணயம். கொருனா என்ற சொல்லுக்கு செக் மொழியில் கிரீடம்/முடி என்று பொருள். 1993 செக் குடியரசும் ஸ்லோவேக்கியக் குடியரசும் ஒன்றிணைந்து செக்கஸ்லோவாக்கியா என்ற நாடாக இருந்தன. அப்போது புழக்கத்திலிருந்த நாணய முறைக்கு செக்கஸ்லோவாக்கிய கொருனா என்று பெயர். 1993ல் இரு நாடுகளும் பிரிந்தபோது நாணய முறைகளும் பிரிந்து செக் கொருனா, ஸ்லோவாக்கிய கொருனா என்று இருவேறு நாணயமுறைகளாகி விட்டன. செக் குடியரசு ஐரோப்பிய ஒன்றியத்தின் இணைந்து விட்டாலும் ஐ. ஒவின் பொது நாணயமான யூரோ நாணய முறையை ஏற்றுக் கொள்ள வில்லை. கொருனாவே செக் குடியரசின் நாணயமாகத் தொடர்கிறது. ஒரு செக் கொருனாவில் 100 ஹலேர்கள் உள்ளன. Wikipediaரோமானியன் லியூ குறித்த விவரங்கள்
லியு ரொமேனியா நாட்டின் நாணயம் ஆகும். இது 1867 இல் முதன் முதலில் அறிமுகப்படுத்தப் பட்டது. அன்று முதல் இன்று வரை நான்கு முறை ரொமேனிய நாட்டில் புதிய நாணயமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவை அனைத்தும் லியு என்றே அழைக்கப்பட்டன. தற்போஹ்டு புழக்கத்திலுள்ள லியு 2005ல் அறிமுகப்படுத்தப்பட்டது. ரொமேனியா ஜனவரி 1, 2007 ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்து விட்டதால் 2014ம் ஆண்டு லியு நாணய முறை கைவிடப்பட்டு யூரோ ரொமேனியாவின் நாணயமாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லியூ என்ற சொல்லுக்கு ரொமேனிய மொழியில் “சிங்கம்” என்று பொருள். இதன் பன்மை வடிவம் ”லெய்”. ஒரு லியுவில் 100 பனிக்கள் உள்ளன. Wikipedia