முகப்புCZK / UAH • நாணயம்
add
CZK / UAH
முந்தைய குளோசிங்
1.73
சந்தைச் செய்திகள்
செக் குடியரசு கொருனா குறித்த விவரங்கள்
செக் கொருனா செக் குடியரசு நாட்டின் நாணயம். கொருனா என்ற சொல்லுக்கு செக் மொழியில் கிரீடம்/முடி என்று பொருள். 1993 செக் குடியரசும் ஸ்லோவேக்கியக் குடியரசும் ஒன்றிணைந்து செக்கஸ்லோவாக்கியா என்ற நாடாக இருந்தன. அப்போது புழக்கத்திலிருந்த நாணய முறைக்கு செக்கஸ்லோவாக்கிய கொருனா என்று பெயர். 1993ல் இரு நாடுகளும் பிரிந்தபோது நாணய முறைகளும் பிரிந்து செக் கொருனா, ஸ்லோவாக்கிய கொருனா என்று இருவேறு நாணயமுறைகளாகி விட்டன. செக் குடியரசு ஐரோப்பிய ஒன்றியத்தின் இணைந்து விட்டாலும் ஐ. ஒவின் பொது நாணயமான யூரோ நாணய முறையை ஏற்றுக் கொள்ள வில்லை. கொருனாவே செக் குடியரசின் நாணயமாகத் தொடர்கிறது. ஒரு செக் கொருனாவில் 100 ஹலேர்கள் உள்ளன. Wikipediaஉக்ரைனியன் ஹிரைவ்னியா குறித்த விவரங்கள்
ஹிருன்யா உக்ரைன் நாட்டின் நாணயம். இது 1996ல் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1990 வரை சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த உக்ரைனியின் சோவியத் ரூபிள் நாணயமுறையாக இருந்து வந்தது. சோவியத் யூனியன் சிதறி உக்ரைன் தனி நாடானபின் சிறிது காலம் ரூபிளே புழக்கத்திலிருந்தது. 1992ல் உக்ரைனிய கார்போவானெட்ஸ் என்ற புதிய நாணயமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் பணவீக்கம் அதிகமானதால 1996ல் புதிய நாணயமுறையாக ஹிருன்யா அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு லட்சம் கார்போவானெட்சுக்கு ஒரு ஹிருன்யா என்ற விகிதத்தில் புதிய நாணயமுறை புழக்கத்தில் விடப்பட்டது. ஹிருன்யா என்ற சொல்லின் பன்மை வடிவம் ஹிருன்யி. ஒரு ஹிருன்யாவில் 100 கோப்பியோக்கி உள்ளன. Wikipedia