முகப்புEUR / KZT • நாணயம்
add
EUR / KZT
முந்தைய குளோசிங்
506.53
சந்தைச் செய்திகள்
யூரோ குறித்த விவரங்கள்
ஐரோ அல்லது யூரோ என்பது ஐரோப்பிய ஒன்றியத்தில் பயன்படுத்தப்படும் நாணய முறையாகும். ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 28 நாடுகளில், 19 நாடுகள் யூரோவை அதிகாரபூர்வ நாணயமாக கொண்டுள்ளன. ஆஸ்திரியா, சைப்ரஸ், எசுத்தோனியா, பெல்ஜியம், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, லக்சம்பேர்க், மால்ட்டா, நெதர்லாந்து, போர்த்துக்கல், சிலோவேக்கியா, சுலோவீனியா, ஸ்பெயின் ஆகியவை இந்த 18 நாடுகளாகும். இந்நாணயம் ஒரு நாளில் 334 மில்லியன் ஐரோப்பியர்களால் பயன்படுத்தப்படுகிறது. மேலும் உலகெங்கும் 210 மில்லியன் மக்கள் யூரோவுடன் தொடர்புடய நாணயத்தை பயன்படுத்துகிறார்கள்.
"யூரோ" என்னும் வார்த்தை திசம்பர் 16,1995ல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
1999ம் ஆண்டு சட்டரீதியாக உருவாக்கப்பட்ட இந்த நாணய முறை, 2002ம் ஆண்டு வரை மின் அஞ்சல் முறைப் பணம் பட்டுவாடா செய்யமட்டுமே உபயோகபப்படுத்தப்படது. பின்னர் 2002ம் ஆண்டு, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் தங்களின் பழைய நாணய முறையை ஒழித்து, ஐரோ நாணய முறையை பயன்படுத்தத் தொடங்கியது.அமெரிக்க டாலருக்கு அடுத்தபடியாக உலகளவில் அதிகப்படியான மக்களால் பயன்படுத்தப்படும் நாணயம் யூரோ ஆகும். €942 பில்லியன் யூரோ அளவில் உலகில் அதிகப்படியான வங்கிப்பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.உலகில் இரண்டாவது பொருளாதார பலம் பொருந்தியதாக யூரோ வலயம் உள்ளது. Wikipediaகஸகஸ்தானி டென்கே குறித்த விவரங்கள்
டெங்கே கசக்ஸ்தான் நாட்டின் நாணயம். கசக்ஸ்தான் 1991 வரை சோவியத் யூனியனின் ஓரங்கமாக இருந்தது. அப்போது சோவியத் ரூபிள் நாணய முறையே கசாக் குடியரசிலும் புழக்கத்திலிருந்தது. 1991ல் சோவியத் யூனியன் சிதறியதும், கசக்ஸ்தான் சுதந்திர நாடானாலும், 1993 வரை ரஷ்ய ரூபிள் நாணய முறையே அங்கு புழக்கத்த்லிருந்தது. 1993ல் டெங்கே என்ற புதிய நாணயம் அறிமுகபடுத்தப்பட்டது. டெங்கே என்ற சொல்லுக்கு கசாக் மொழியில் “தராசு” என்று பொருள். ஒரு லாரியில் 100 டியன்கள் உள்ளன. 2007ல் டெங்கேவிற்கு T̅ என்ற புதிய சின்னம் அறிமுகப்படுத்தப்படது. டெங்கே என்ற சொல்லிற்கு தனியே பன்மை வடிவம் கிடையாது.
1000 tenge commemorative banknote for 2010 year - the Chairmanship of Kazakhstan in OSCE Wikipedia