முகப்புGBP / MXN • நாணயம்
add
GBP / MXN
முந்தைய குளோசிங்
22.95
சந்தைச் செய்திகள்
பவுண்டு குறித்த விவரங்கள்
பிரித்தானிய பவுண்ட் என்பது ஐக்கிய இராச்சியத்தின் நாணய அலகாகும். ஒரு பவுண்ட் நூறு சதங்கள் ஆக பிரிக்கப்படுகிறது. இது பொதுவாக £ எனக் குறிக்கப்படுகிறது. உலகில் அதிக பெறுமதி வாய்ந்த நாணயங்களில் பவுண்ட் ஒன்றாகும். Wikipediaமெக்ஸிகன் பெசோ குறித்த விவரங்கள்
மெக்சிகோவின் பெசோ என்னும் நாணயம், மெக்சிக்கோ நாட்டில் புழக்கத்தில் உள்ளது. இந்த நாணயமும், டாலரும் ஒரே மூலத்தைக் கொண்டவை. இவை இரண்டும் 15 முதல் 19ஆம் நூற்றாண்டு வரை புழக்கத்தில் இருந்த எஸ்பானிய டாலரை அடிப்படையாகக் கொண்டவை இது உலக அளவில் அதிக புழக்கத்தில் உள்ள நாணயங்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது. வட அமெரிக்க, தென்னமெரிக்கக் கண்டங்களில் உள்ள நாணயங்களான அமெரிக்க டாலர், கனடா டொலர் ஆகியவை முறையே முதல், இரண்டாம் இடங்களில் உள்ளன.
இதன் தற்போதைய ஐ.எசு.ஓ 4217 குறியீடு MXN ஆகும். 1993ஆம் ஆண்டுக்கு முன்னர், MXP என்ற குறீயீடு பயன்படுத்தப்பட்டது. பெசோ 100 செண்டாவோக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இது ¢ என்ற குறியீட்டால் காட்டப்படும். 2015ஆம் ஆண்டின் ஆகஸ்டு பதினொன்றாம் நாளில், ஒரு ஐரோவுக்கு 18.07 மெக்சிகோ பெசோ சமமாகும். ஒரு அமெரிக்க டாலருக்கு 16.36 மெக்சிகோ பெசோ சம மதிப்பை கொண்டுள்ளது. Wikipedia