முகப்புGBP / RSD • நாணயம்
add
GBP / RSD
முந்தைய குளோசிங்
138.95
சந்தைச் செய்திகள்
பவுண்டு குறித்த விவரங்கள்
பிரித்தானிய பவுண்ட் என்பது ஐக்கிய இராச்சியத்தின் நாணய அலகாகும். ஒரு பவுண்ட் நூறு சதங்கள் ஆக பிரிக்கப்படுகிறது. இது பொதுவாக £ எனக் குறிக்கப்படுகிறது. உலகில் அதிக பெறுமதி வாய்ந்த நாணயங்களில் பவுண்ட் ஒன்றாகும். Wikipediaசெர்பியன் தினார் குறித்த விவரங்கள்
செர்பிய தினார் செர்பியா நாட்டின் நாணயம். தினார் என்ற பெயர்கொண்ட நாணய முறை கி.பி. 1214ம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்டது. ஒட்டோமான் பேரரசு செர்பியாவைக் கைப்பற்றியபின் நவீன தினார் நாணய முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 1920ல் செர்பிய தினாருக்கு பதில் யுகோஸ்லாவிய தினார் புழக்கத்துக்கு வந்தது. அன்று முதல், 1941-44ல் நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் செர்பியா இருந்த ஒரு குறுகிய காலகட்டத்தைத் தவிர 2003 வரை யுகோஸ்லாவிய தினாரே செர்பியாவின் நாணயமாக இருந்தது. 1990களில் யுகோஸ்லாவியா சிதறியதால் பிரிந்து போன ஒவ்வொரு நாடும் தனியே நாணய முறைகளை அறிமுகப்படுத்திக் கொண்டன. இறுதியில் மிஞ்சியிருந்த செர்பியாவும் 2003ல் செர்பிய தினார் முறையை அறிமுகப்படுத்தியது. ஒரு தினாரில் 100 பாராக்கள் உள்ளன. அதிகாரப்பூர்வமாக “RSD" என்ற குறியீடும் நடைமுறையில் “din” என்ற குறியீடும் இந்த நாணயத்தைக் குறிக்க பயன்படுத்தப்படுகின்றன. தினார் என்ற சொல்லின் பன்மை வடிவம் “தினாரா”. Wikipedia