முகப்புHKD / BRL • நாணயம்
add
HKD / BRL
முந்தைய குளோசிங்
0.74
சந்தைச் செய்திகள்
ஹாங்காங் டாலர் குறித்த விவரங்கள்
ஹொங்கொங் டொலர் அல்லது ஹாங்காங் டாலர் என்பது ஹொங்கொங்கில் புழக்கத்தில் உள்ள நாணயமாகும். சட்ட அதிகாரத்திற்கு அமைய ஹொங்கொங் நாணயத்தின் நாணயக்குறி, சுருக்கக்குறி: ஆகும். ஹொங்கொங் டொலர் உலகில் அதிக வணிகப் புழக்கத்தில் உள்ள நாணயங்களில் ஒன்பதாவது நிலையில் உள்ளது. ஆங்கிலத்தில் இதன் சுருக்கக் குறியீடாக, அமெரிக்க நாணயத்தின் சுருக்கக்குறியீட்டையே பயன்படுத்தப்படுகின்றது; அதேவேளை மாற்றீடாக ஆங்கில எழுத்துக்கள் "HK" உடன் இணைத்து எனவும் பயன்படுத்தப்படுகின்றது. ஒரு ஹொங்கொங் டொலர் என்பது நூறு ஹொங்கொங் சதங்களைக் கொண்டதாகும்.
அமெரிக்க டொலர் ஒன்றிற்கான ஹொங்கொங் டொலரின் பெறுமதி HK$ 7.80 ஆகும். Wikipediaபிரேசிலியன் ரியால் குறித்த விவரங்கள்
ரெயால் பிரேசிலின் புழக்கத்திலுள்ள நாணயம் ஆகும். இதன் குறியீடு R$ மற்றும் ஐ.எசு.ஓ குறியீடு BRL ஆகும். ஒரு ரெயால் 100 சென்டவோசாக பகுக்கப்பட்டுள்ளது.
இப்போது புழக்கத்திலிருக்கும் ரெயால் 1994 இல் பழைய நாணயத்திற்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டது. முப்பதாண்டுகளாக வளர்ந்து வந்த பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த செயல்படுத்தப்பட்ட நிதி மேலாண்மை சீர்திருத்தத்தின் அங்கமாக புதிய நாணயம் வெளியிடப்பட்டது. அமெரிக்க டாலருக்கு இணையான நாணயமாற்று வீதத்தில் வெளியிடப்பட்ட இந்தப் புதிய நாணயம் 1999இல் 2:1 ஆகவும் 2002இல் கிட்டத்தட்ட 4:1 ஆகவும் மதிப்பிறங்கியது. பின்னர் பொருளியல் வளர்ச்சியால் 2006இல் மீளவும் 2:1 நிலையை எட்டியது. திசம்பர் 31, 2013இல் நாணய மாற்றுவீதம் ஒரு அமெரிக்க டாலருக்கு 2.36 பிரேசிலிய ரெயாலாக இருந்தது.
டாலரைப் போன்ற, இரட்டை நெடுங்கோடுகளை உடைய சிஃப்ரோ குறியீடு மூலம் குறிக்கப்படுகிறது. இருப்பினும் ஒருங்குறி இதனை எழுத்துரு வடிவத்தின் வேறுபாடாகவே கருதி தனி குறியீட்டை வழங்கவில்லை. Wikipedia