முகப்புINR / CZK • நாணயம்
add
INR / CZK
முந்தைய குளோசிங்
0.28
சந்தைச் செய்திகள்
JPY / USD
0.23%
இந்திய ரூபாய் குறித்த விவரங்கள்
இந்தியாவின் நாணயம் இந்திய ரூபாய் என அழைக்கப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி இந்திய ரூபாயை வெளியிடுகிறது. INR என்பது இந்திய ரூபாயின் ஐஎஸ்ஓ 4217 குறியீடு.
ரிசர்வ் வங்கியால் ₹5, ₹10, ₹20, ₹50, ₹100, ₹500 வரையிலான ரூபாய் தாள்கள் அச்சடிக்கப்படுகின்றன. ஒரு ரூபாய் தாள்கள் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரையிலான நாணயங்களை வெளியிடும் அதிகாரம் இந்திய அரசுக்கு மட்டுமே உண்டு. உலோக நாணயங்கள் ₹1, ₹2, ₹5, ₹10 மற்றும் ₹20 வரையிலான மதிப்புகளில் வெளியிடப்படுகின்றன. ₹20 க்கு அதிகமான மதிப்புடைய நாணயங்கள் புகழ்வாய்ந்த நபர்களையோ அல்லது ஏதேனும் ஒரு நிகழ்வையோ குறிப்பிடும் வகையில் நினைவு நாணயங்களாக வெளியிடப்படுகின்றன. 50 பைசாவுக்கு குறைவான பைசா நாணயங்கள் தற்போது புழக்கத்தில் இல்லை. Wikipediaசெக் குடியரசு கொருனா குறித்த விவரங்கள்
செக் கொருனா செக் குடியரசு நாட்டின் நாணயம். கொருனா என்ற சொல்லுக்கு செக் மொழியில் கிரீடம்/முடி என்று பொருள். 1993 செக் குடியரசும் ஸ்லோவேக்கியக் குடியரசும் ஒன்றிணைந்து செக்கஸ்லோவாக்கியா என்ற நாடாக இருந்தன. அப்போது புழக்கத்திலிருந்த நாணய முறைக்கு செக்கஸ்லோவாக்கிய கொருனா என்று பெயர். 1993ல் இரு நாடுகளும் பிரிந்தபோது நாணய முறைகளும் பிரிந்து செக் கொருனா, ஸ்லோவாக்கிய கொருனா என்று இருவேறு நாணயமுறைகளாகி விட்டன. செக் குடியரசு ஐரோப்பிய ஒன்றியத்தின் இணைந்து விட்டாலும் ஐ. ஒவின் பொது நாணயமான யூரோ நாணய முறையை ஏற்றுக் கொள்ள வில்லை. கொருனாவே செக் குடியரசின் நாணயமாகத் தொடர்கிறது. ஒரு செக் கொருனாவில் 100 ஹலேர்கள் உள்ளன. Wikipedia