முகப்புINR / MXN • நாணயம்
add
INR / MXN
முந்தைய குளோசிங்
0.22
சந்தைச் செய்திகள்
இந்திய ரூபாய் குறித்த விவரங்கள்
இந்தியாவின் நாணயம் இந்திய ரூபாய் என அழைக்கப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி இந்திய ரூபாயை வெளியிடுகிறது. INR என்பது இந்திய ரூபாயின் ஐஎஸ்ஓ 4217 குறியீடு.
ரிசர்வ் வங்கியால் ₹5, ₹10, ₹20, ₹50, ₹100, ₹500 வரையிலான ரூபாய் தாள்கள் அச்சடிக்கப்படுகின்றன. ஒரு ரூபாய் தாள்கள் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரையிலான நாணயங்களை வெளியிடும் அதிகாரம் இந்திய அரசுக்கு மட்டுமே உண்டு. உலோக நாணயங்கள் ₹1, ₹2, ₹5, ₹10 மற்றும் ₹20 வரையிலான மதிப்புகளில் வெளியிடப்படுகின்றன. ₹20 க்கு அதிகமான மதிப்புடைய நாணயங்கள் புகழ்வாய்ந்த நபர்களையோ அல்லது ஏதேனும் ஒரு நிகழ்வையோ குறிப்பிடும் வகையில் நினைவு நாணயங்களாக வெளியிடப்படுகின்றன. 50 பைசாவுக்கு குறைவான பைசா நாணயங்கள் தற்போது புழக்கத்தில் இல்லை. Wikipediaமெக்ஸிகன் பெசோ குறித்த விவரங்கள்
மெக்சிகோவின் பெசோ என்னும் நாணயம், மெக்சிக்கோ நாட்டில் புழக்கத்தில் உள்ளது. இந்த நாணயமும், டாலரும் ஒரே மூலத்தைக் கொண்டவை. இவை இரண்டும் 15 முதல் 19ஆம் நூற்றாண்டு வரை புழக்கத்தில் இருந்த எஸ்பானிய டாலரை அடிப்படையாகக் கொண்டவை இது உலக அளவில் அதிக புழக்கத்தில் உள்ள நாணயங்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது. வட அமெரிக்க, தென்னமெரிக்கக் கண்டங்களில் உள்ள நாணயங்களான அமெரிக்க டாலர், கனடா டொலர் ஆகியவை முறையே முதல், இரண்டாம் இடங்களில் உள்ளன.
இதன் தற்போதைய ஐ.எசு.ஓ 4217 குறியீடு MXN ஆகும். 1993ஆம் ஆண்டுக்கு முன்னர், MXP என்ற குறீயீடு பயன்படுத்தப்பட்டது. பெசோ 100 செண்டாவோக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இது ¢ என்ற குறியீட்டால் காட்டப்படும். 2015ஆம் ஆண்டின் ஆகஸ்டு பதினொன்றாம் நாளில், ஒரு ஐரோவுக்கு 18.07 மெக்சிகோ பெசோ சமமாகும். ஒரு அமெரிக்க டாலருக்கு 16.36 மெக்சிகோ பெசோ சம மதிப்பை கொண்டுள்ளது. Wikipedia