முகப்புINR / PKR • நாணயம்
add
INR / PKR
முந்தைய குளோசிங்
3.33
சந்தைச் செய்திகள்
இந்திய ரூபாய் குறித்த விவரங்கள்
இந்தியாவின் நாணயம் இந்திய ரூபாய் என அழைக்கப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி இந்திய ரூபாயை வெளியிடுகிறது. INR என்பது இந்திய ரூபாயின் ஐஎஸ்ஓ 4217 குறியீடு.
ரிசர்வ் வங்கியால் ₹5, ₹10, ₹20, ₹50, ₹100, ₹500 வரையிலான ரூபாய் தாள்கள் அச்சடிக்கப்படுகின்றன. ஒரு ரூபாய் தாள்கள் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரையிலான நாணயங்களை வெளியிடும் அதிகாரம் இந்திய அரசுக்கு மட்டுமே உண்டு. உலோக நாணயங்கள் ₹1, ₹2, ₹5, ₹10 மற்றும் ₹20 வரையிலான மதிப்புகளில் வெளியிடப்படுகின்றன. ₹20 க்கு அதிகமான மதிப்புடைய நாணயங்கள் புகழ்வாய்ந்த நபர்களையோ அல்லது ஏதேனும் ஒரு நிகழ்வையோ குறிப்பிடும் வகையில் நினைவு நாணயங்களாக வெளியிடப்படுகின்றன. 50 பைசாவுக்கு குறைவான பைசா நாணயங்கள் தற்போது புழக்கத்தில் இல்லை. Wikipediaபாகிஸ்தானி ரூபாய் குறித்த விவரங்கள்
பாக்கித்தானிய ரூபாய் பாக்கித்தானின் அலுவல்முறையான நாணயம் ஆகும். இதனை நாட்டின் நடுவண் வங்கியாக செயல்படும் பாக்கித்தானிய அரசு வங்கி வெளியிடுகின்றது. மிகவும் பெரும்பான்மையாக பயன்படுத்தப்படும் சின்னம் ரூ ஆகும்; சரக்குகளையும் சேவைகளையும் பாவிக்கும் போது வழங்கப்படும் இரசீதுகளில் இச்சின்னம் பயன்படுத்தப்படுகின்றது. பாக்கித்தானில் "ரூபாய்கள்", "ருபாயா" அல்லது "ருபாயே" என அறியப்படுகின்றது. பாக்கித்தானில் ரூபாயின் பெரும் மதிப்புகள் தென்னாசிய எண் முறையில் ஆயிரம், இலட்சம், கோடி, 1 அரப், 1 கரப், 100 கரப் என எண்ணப்படுகின்றன. Wikipedia