முகப்புJPY / AZN • நாணயம்
add
JPY / AZN
முந்தைய குளோசிங்
0.011
சந்தைச் செய்திகள்
ஜப்பானிய யென் குறித்த விவரங்கள்
யென் என்பது ஜப்பானில் பயன்படுத்தப் படும் நாணய முறையாகும். இது ஜப்பானிய மொழியில் என் என்று அழைக்கப்படுகிறது. யூரோ மற்றும் அமெரிக்க டாலர்க்கு அடுத்தப்படியாக அதிகமாக உலக மக்கள் கை இருப்பு வைத்திருப்பது 'என்' ஆகும்.
யப்பானிய என் உருவாக காரணம் நவீன யப்பானுக்கு வழிகோலிய மெய்ஜி அரசாங்கமே. பல்வேறு சீர்திருத்தங்களுக்கு அடிகோலிய மெய்ஜி அரசு யப்பானுக்கும் ஒரு பொதுவான நாணய முறை தேவை என்று கருதி ஐரோப்பாவின் பதின்ம நாணய முறையை பின்பற்றி யப்பானிய என் உருவாகப்பட்டது.
மெய்ஜி அரசின் மறு சீரமைப்பிற்கு முன் பல்வேறு பகுதிகளை ஆண்ட நிலபிரபுத்துவ ஆட்சியாளர்கள் தனி தனியே நாணயங்களை வெளியிட்டனர். Wikipediaஅசர்பைஜானி மனத் குறித்த விவரங்கள்
மனாட் அசர்பைஜான் நாட்டின் நாணயம். மனாட் என்ற சொல்லுக்கு அசேரி மொழியில் ”நாணயம்” என்று பொருள். அசர்பைஜான் நாட்டில் மனாட் என்ற பெயரில் மூன்று நாணய முறைகள் இருந்துள்ளன. முதன் முதலில் 1919ல் மனாட் என்ற பெயருள்ள நாணயமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. 1923 வரை இது புழக்கத்திலிருந்தது. அதன் பின்னர் அசர்பைஜான் 1991 வரை சோவியத் யூனியனின் ஓரங்கமாக இருந்தது. அப்போது சோவியத் ரூபிள் நாணய முறையே அசர்பைஜானிலும் புழக்கத்திலிருந்தது. 1991ல் சோவியத் யூனியன் சிதறியதும், அசர்பைஜான் சுதந்திர நாடானாலும், 1992 வரை ரஷ்ய ரூபிள் நாணய முறையே அங்கு புழக்கத்திலிருந்தது. 1992ல் மனாட் என்ற புதிய நாணயம் அறிமுகபடுத்தப்பட்டது. பணவீக்கம் அதிமானதால் 2006ல் மனாட் என்ற பெயருடைய இன்னொரு புதிய நாணயமுறை அறிமுகபடுத்தப்பட்டது. இம்மூன்று நாணயங்களும் முதலாம், இரண்டாம், மூன்றாம் மனாட் என்றழைக்கப்படுகின்றன. ஒரு மனாட்டில் 100 கேப்பிக்குகள் உள்ளன. மனாட்டைக் குறிக்க என்ற சின்னம் பயன்படுத்தபடுகிறது. Wikipedia