முகப்புJPY / MXN • நாணயம்
add
JPY / MXN
முந்தைய குளோசிங்
0.13
சந்தைச் செய்திகள்
ஜப்பானிய யென் குறித்த விவரங்கள்
யென் என்பது ஜப்பானில் பயன்படுத்தப் படும் நாணய முறையாகும். இது ஜப்பானிய மொழியில் என் என்று அழைக்கப்படுகிறது. யூரோ மற்றும் அமெரிக்க டாலர்க்கு அடுத்தப்படியாக அதிகமாக உலக மக்கள் கை இருப்பு வைத்திருப்பது 'என்' ஆகும்.
யப்பானிய என் உருவாக காரணம் நவீன யப்பானுக்கு வழிகோலிய மெய்ஜி அரசாங்கமே. பல்வேறு சீர்திருத்தங்களுக்கு அடிகோலிய மெய்ஜி அரசு யப்பானுக்கும் ஒரு பொதுவான நாணய முறை தேவை என்று கருதி ஐரோப்பாவின் பதின்ம நாணய முறையை பின்பற்றி யப்பானிய என் உருவாகப்பட்டது.
மெய்ஜி அரசின் மறு சீரமைப்பிற்கு முன் பல்வேறு பகுதிகளை ஆண்ட நிலபிரபுத்துவ ஆட்சியாளர்கள் தனி தனியே நாணயங்களை வெளியிட்டனர். Wikipediaமெக்ஸிகன் பெசோ குறித்த விவரங்கள்
மெக்சிகோவின் பெசோ என்னும் நாணயம், மெக்சிக்கோ நாட்டில் புழக்கத்தில் உள்ளது. இந்த நாணயமும், டாலரும் ஒரே மூலத்தைக் கொண்டவை. இவை இரண்டும் 15 முதல் 19ஆம் நூற்றாண்டு வரை புழக்கத்தில் இருந்த எஸ்பானிய டாலரை அடிப்படையாகக் கொண்டவை இது உலக அளவில் அதிக புழக்கத்தில் உள்ள நாணயங்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது. வட அமெரிக்க, தென்னமெரிக்கக் கண்டங்களில் உள்ள நாணயங்களான அமெரிக்க டாலர், கனடா டொலர் ஆகியவை முறையே முதல், இரண்டாம் இடங்களில் உள்ளன.
இதன் தற்போதைய ஐ.எசு.ஓ 4217 குறியீடு MXN ஆகும். 1993ஆம் ஆண்டுக்கு முன்னர், MXP என்ற குறீயீடு பயன்படுத்தப்பட்டது. பெசோ 100 செண்டாவோக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இது ¢ என்ற குறியீட்டால் காட்டப்படும். 2015ஆம் ஆண்டின் ஆகஸ்டு பதினொன்றாம் நாளில், ஒரு ஐரோவுக்கு 18.07 மெக்சிகோ பெசோ சமமாகும். ஒரு அமெரிக்க டாலருக்கு 16.36 மெக்சிகோ பெசோ சம மதிப்பை கொண்டுள்ளது. Wikipedia