முகப்புJPY / TRY • நாணயம்
add
JPY / TRY
முந்தைய குளோசிங்
0.22
சந்தைச் செய்திகள்
ஜப்பானிய யென் குறித்த விவரங்கள்
யென் என்பது ஜப்பானில் பயன்படுத்தப் படும் நாணய முறையாகும். இது ஜப்பானிய மொழியில் என் என்று அழைக்கப்படுகிறது. யூரோ மற்றும் அமெரிக்க டாலர்க்கு அடுத்தப்படியாக அதிகமாக உலக மக்கள் கை இருப்பு வைத்திருப்பது 'என்' ஆகும்.
யப்பானிய என் உருவாக காரணம் நவீன யப்பானுக்கு வழிகோலிய மெய்ஜி அரசாங்கமே. பல்வேறு சீர்திருத்தங்களுக்கு அடிகோலிய மெய்ஜி அரசு யப்பானுக்கும் ஒரு பொதுவான நாணய முறை தேவை என்று கருதி ஐரோப்பாவின் பதின்ம நாணய முறையை பின்பற்றி யப்பானிய என் உருவாகப்பட்டது.
மெய்ஜி அரசின் மறு சீரமைப்பிற்கு முன் பல்வேறு பகுதிகளை ஆண்ட நிலபிரபுத்துவ ஆட்சியாளர்கள் தனி தனியே நாணயங்களை வெளியிட்டனர். Wikipediaதுருக்கிஷ் லீரா குறித்த விவரங்கள்
துருக்கிய லிரா துருக்கி நாட்டின் நாணயம். வட சைப்பிரசு நாட்டிலும் நாணயமாக பயன்படுத்தப்படுகிறது. லிரா 1844ல் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2005 வரை புழக்கத்திலிருந்த இந்த நாணயம் “முதல் லிரா” என்றழைக்கப்பட்டது. 2005ல் துருக்கி அரசு புதிய துருக்கிய லிரா என்ற புது நாணய முறையை உருவாக்கியது. இது “இரண்டாம் லிரா” என்றும் அழைக்கப்படுகிறது. முதல் லிரா மதிப்பு மிகக்குறைவாக இருந்தது இம்மாற்றத்துக்கு காரணம். ஒரு புது லிராவின் மதிப்பு பத்து லட்சம் முதல் லிராக்கள். 2008 துவக்கத்திலிருந்து முதல் லிரா புழக்கத்திலிருந்து விலக்கிக் கொள்ளப்பபட்டது. ஒரு லிராவில் 100 குருஸ்கள் உள்ளன. Wikipedia