முகப்புRUB / BDT • நாணயம்
add
RUB / BDT
முந்தைய குளோசிங்
1.33
சந்தைச் செய்திகள்
ரஷியன் ரூபிள் குறித்த விவரங்கள்
ரூபிள், ரஷ்யா நாட்டின் நாணயம். இது ரஷ்யாவைத் தவிர அப்காசியா, தெற்கு ஒசேத்தியா ஆகிய பகுதிகளிலும் நாணயமாக பயன்படுத்தப்படுகிறது. பெலருஸ், ட்ரான்ஸ்னிஸ்டிரியா போன்ற தேசங்களின் நாணயங்களும் “ரூபிள்” என்றே அழைக்கப்படுகின்றன. அவற்றிலிருந்து வேறுபடுத்திக்காட்ட இது “ரஷ்ய ரூபிள்” என்றும் அழைக்கப்படுகிறது. முன்னாள் ரஷ்யப் பேரரசு மற்றும் சோவியத் யூனியன் ஆகியவற்றின் நாணயங்களும் ரூபிள் என்றே அழைக்கப்பட்டன. தற்சமயம் ரூபிளுக்கென்று தனியே சின்னம் எதுவும் இல்லை. ஒரு ரூபிளில் 100 கோப்பெக்குகள் உள்ளன. Wikipediaவங்காளதேச டாக்கா குறித்த விவரங்கள்
வங்காளதேச இட்டாக்கா வங்காளதேச மக்கள் குடியரசின் அலுவல்முறை நாணயம் ஆகும். ৳5க்கும் அதற்கு மேலும் மதிப்புள்ள வங்கித்தாள்களை வங்காளதேச வங்கி வெளியிடுகின்றது. ৳1, ৳2 வங்கித்தாள்களையும், நாணயங்களையும் வெளியிடுவது வங்காளதேச அரசின் நிதித்துறை அமைச்சரகத்தின் பொறுப்பில் உள்ளது. பெரும்பாலும் "৳" என்ற சின்னமும் கடை இரசீதுகளில் "Tk" என்ற குறியும் பயன்படுத்தப்படுகின்றது. ৳1 100 பைசாக்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
வங்காள மொழியில் இட்டாக்கா என்ற சொல் பணம், நாணயம், தாள்கள் ஆகியவற்றைக் குறிக்கும் பொதுப் பெயராகும். எனவே வங்காளமொழியில் பேசுமொருவர் எந்த நாணயத்தையும் இட்டாக்கா எனக் குறிப்பிடுவார். இந்திய மாநிலங்களான மேற்கு வங்காளம், திரிபுராவிலும் இந்தியாவின் அலுவல்முறையான இந்திய ரூபாய் "இட்டாக்கா" என பேச்சுவழக்கில் குறிப்பிடப்படுகின்றது. Wikipedia