முகப்புUAH / EUR • நாணயம்
add
UAH / EUR
முந்தைய குளோசிங்
0.022
சந்தைச் செய்திகள்
உக்ரைனியன் ஹிரைவ்னியா குறித்த விவரங்கள்
ஹிருன்யா உக்ரைன் நாட்டின் நாணயம். இது 1996ல் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1990 வரை சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த உக்ரைனியின் சோவியத் ரூபிள் நாணயமுறையாக இருந்து வந்தது. சோவியத் யூனியன் சிதறி உக்ரைன் தனி நாடானபின் சிறிது காலம் ரூபிளே புழக்கத்திலிருந்தது. 1992ல் உக்ரைனிய கார்போவானெட்ஸ் என்ற புதிய நாணயமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் பணவீக்கம் அதிகமானதால 1996ல் புதிய நாணயமுறையாக ஹிருன்யா அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு லட்சம் கார்போவானெட்சுக்கு ஒரு ஹிருன்யா என்ற விகிதத்தில் புதிய நாணயமுறை புழக்கத்தில் விடப்பட்டது. ஹிருன்யா என்ற சொல்லின் பன்மை வடிவம் ஹிருன்யி. ஒரு ஹிருன்யாவில் 100 கோப்பியோக்கி உள்ளன. Wikipediaயூரோ குறித்த விவரங்கள்
ஐரோ அல்லது யூரோ என்பது ஐரோப்பிய ஒன்றியத்தில் பயன்படுத்தப்படும் நாணய முறையாகும். ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 28 நாடுகளில், 19 நாடுகள் யூரோவை அதிகாரபூர்வ நாணயமாக கொண்டுள்ளன. ஆஸ்திரியா, சைப்ரஸ், எசுத்தோனியா, பெல்ஜியம், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, லக்சம்பேர்க், மால்ட்டா, நெதர்லாந்து, போர்த்துக்கல், சிலோவேக்கியா, சுலோவீனியா, ஸ்பெயின் ஆகியவை இந்த 18 நாடுகளாகும். இந்நாணயம் ஒரு நாளில் 334 மில்லியன் ஐரோப்பியர்களால் பயன்படுத்தப்படுகிறது. மேலும் உலகெங்கும் 210 மில்லியன் மக்கள் யூரோவுடன் தொடர்புடய நாணயத்தை பயன்படுத்துகிறார்கள்.
"யூரோ" என்னும் வார்த்தை திசம்பர் 16,1995ல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
1999ம் ஆண்டு சட்டரீதியாக உருவாக்கப்பட்ட இந்த நாணய முறை, 2002ம் ஆண்டு வரை மின் அஞ்சல் முறைப் பணம் பட்டுவாடா செய்யமட்டுமே உபயோகபப்படுத்தப்படது. பின்னர் 2002ம் ஆண்டு, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் தங்களின் பழைய நாணய முறையை ஒழித்து, ஐரோ நாணய முறையை பயன்படுத்தத் தொடங்கியது.அமெரிக்க டாலருக்கு அடுத்தபடியாக உலகளவில் அதிகப்படியான மக்களால் பயன்படுத்தப்படும் நாணயம் யூரோ ஆகும். €942 பில்லியன் யூரோ அளவில் உலகில் அதிகப்படியான வங்கிப்பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.உலகில் இரண்டாவது பொருளாதார பலம் பொருந்தியதாக யூரோ வலயம் உள்ளது. Wikipedia