முகப்புUSD / AZN • நாணயம்
add
USD / AZN
முந்தைய குளோசிங்
1.70
சந்தைச் செய்திகள்
அமெரிக்க டாலர் குறித்த விவரங்கள்
அமெரிக்க டாலர் என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாணய அலகாகும். இது பொதுவாக மற்றைய சில நாடுகளின் டாலர்களுடன் வேறு படுத்திக் காட்டுவதற்காக $, அல்லது USD அல்லது US$ எனக் குறிக்கப்படும். ஒரு அமெரிக்க டாலர் 100 சதம் ஆகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் டாலர் நாணயம் ஜூலை 6, 1785 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1995 இல் கையிருப்பிலிருந்த $380 பில்லியன் டாலர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஐக்கிய அமெரிக்காவுக்கு வெளியே புழங்கின. 2005 இல் கையிருப்பிலிருந்த பணம் இரண்டு மடங்காக $760 பில்லியனாக அதிகரித்தது. Wikipediaஅசர்பைஜானி மனத் குறித்த விவரங்கள்
மனாட் அசர்பைஜான் நாட்டின் நாணயம். மனாட் என்ற சொல்லுக்கு அசேரி மொழியில் ”நாணயம்” என்று பொருள். அசர்பைஜான் நாட்டில் மனாட் என்ற பெயரில் மூன்று நாணய முறைகள் இருந்துள்ளன. முதன் முதலில் 1919ல் மனாட் என்ற பெயருள்ள நாணயமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. 1923 வரை இது புழக்கத்திலிருந்தது. அதன் பின்னர் அசர்பைஜான் 1991 வரை சோவியத் யூனியனின் ஓரங்கமாக இருந்தது. அப்போது சோவியத் ரூபிள் நாணய முறையே அசர்பைஜானிலும் புழக்கத்திலிருந்தது. 1991ல் சோவியத் யூனியன் சிதறியதும், அசர்பைஜான் சுதந்திர நாடானாலும், 1992 வரை ரஷ்ய ரூபிள் நாணய முறையே அங்கு புழக்கத்திலிருந்தது. 1992ல் மனாட் என்ற புதிய நாணயம் அறிமுகபடுத்தப்பட்டது. பணவீக்கம் அதிமானதால் 2006ல் மனாட் என்ற பெயருடைய இன்னொரு புதிய நாணயமுறை அறிமுகபடுத்தப்பட்டது. இம்மூன்று நாணயங்களும் முதலாம், இரண்டாம், மூன்றாம் மனாட் என்றழைக்கப்படுகின்றன. ஒரு மனாட்டில் 100 கேப்பிக்குகள் உள்ளன. மனாட்டைக் குறிக்க என்ற சின்னம் பயன்படுத்தபடுகிறது. Wikipedia