முகப்புUSD / RSD • நாணயம்
add
USD / RSD
முந்தைய குளோசிங்
107.16
சந்தைச் செய்திகள்
அமெரிக்க டாலர் குறித்த விவரங்கள்
அமெரிக்க டாலர் என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாணய அலகாகும். இது பொதுவாக மற்றைய சில நாடுகளின் டாலர்களுடன் வேறு படுத்திக் காட்டுவதற்காக $, அல்லது USD அல்லது US$ எனக் குறிக்கப்படும். ஒரு அமெரிக்க டாலர் 100 சதம் ஆகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் டாலர் நாணயம் ஜூலை 6, 1785 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1995 இல் கையிருப்பிலிருந்த $380 பில்லியன் டாலர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஐக்கிய அமெரிக்காவுக்கு வெளியே புழங்கின. 2005 இல் கையிருப்பிலிருந்த பணம் இரண்டு மடங்காக $760 பில்லியனாக அதிகரித்தது. Wikipediaசெர்பியன் தினார் குறித்த விவரங்கள்
செர்பிய தினார் செர்பியா நாட்டின் நாணயம். தினார் என்ற பெயர்கொண்ட நாணய முறை கி.பி. 1214ம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்டது. ஒட்டோமான் பேரரசு செர்பியாவைக் கைப்பற்றியபின் நவீன தினார் நாணய முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 1920ல் செர்பிய தினாருக்கு பதில் யுகோஸ்லாவிய தினார் புழக்கத்துக்கு வந்தது. அன்று முதல், 1941-44ல் நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் செர்பியா இருந்த ஒரு குறுகிய காலகட்டத்தைத் தவிர 2003 வரை யுகோஸ்லாவிய தினாரே செர்பியாவின் நாணயமாக இருந்தது. 1990களில் யுகோஸ்லாவியா சிதறியதால் பிரிந்து போன ஒவ்வொரு நாடும் தனியே நாணய முறைகளை அறிமுகப்படுத்திக் கொண்டன. இறுதியில் மிஞ்சியிருந்த செர்பியாவும் 2003ல் செர்பிய தினார் முறையை அறிமுகப்படுத்தியது. ஒரு தினாரில் 100 பாராக்கள் உள்ளன. அதிகாரப்பூர்வமாக “RSD" என்ற குறியீடும் நடைமுறையில் “din” என்ற குறியீடும் இந்த நாணயத்தைக் குறிக்க பயன்படுத்தப்படுகின்றன. தினார் என்ற சொல்லின் பன்மை வடிவம் “தினாரா”. Wikipedia