Google Maps/Google Earth கூடுதல் சேவை விதிமுறைகள்

கடைசியாக மாற்றியது: ஜூலை 2022

Google Maps/Google Earthதைப் பயன்படுத்த, (1) Google சேவை விதிமுறைகளையும் (2) Google Maps/Google Earthதின் இந்தக் கூடுதல் சேவை விதிமுறைகளையும் (“Maps/Earthதின் கூடுதல் விதிமுறைகள்”) நீங்கள் ஏற்க வேண்டும். Google Maps/Google Earth மற்றும் Google Maps/Google Earth APIகளுக்கான சட்டப்பூர்வ அறிவிப்புகள் Maps/Earthதின் கூடுதல் விதிமுறைகளில் குறிப்புகளாகச் சேர்க்கப்படுகின்றன.

இந்த ஆவணங்கள் ஒவ்வொன்றையும் கவனமாகப் படிக்கவும். இந்த ஆவணங்கள் மொத்தமாக “விதிமுறைகள்” என்று அழைக்கப்படுகின்றன. எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும்போது எங்களிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்பதையும் உங்களிடம் நாங்கள் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதையும் இவை தெளிவுப்படுத்துகின்றன.

உங்கள் Business Profileலை நிர்வகிக்க Google Mapsஸில் உள்ள வணிகர்களுக்கு மட்டுமேயான அம்சங்களைப் பயன்படுத்துகிறீர்கள் எனில் அந்தப் பயன்பாட்டிற்கு https://support.google.com/business/answer/9292476 தளத்தில் உள்ள Google Business Profile விதிமுறைகள் பொருந்தும்.

இது இந்த விதிமுறைகளின் பகுதியாக இல்லாவிட்டாலும், உங்கள் தகவல்களை எவ்வாறு புதுப்பிக்கலாம், நிர்வகிக்கலாம், பதிவிறக்கலாம், நீக்கலாம் என்பதை நன்கு புரிந்துகொள்ள, எங்கள் தனியுரிமைக் கொள்கையைப் படிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

  1. உரிமம். இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு நீங்கள் இணங்கினால், Google வரைபடம்/Google எர்த்தைப் பயன்படுத்துவதற்கான பிரத்யேகமல்லாத, பகிர முடியாத உரிமத்தை Google உங்களுக்கு வழங்கும். இதில் உள்ள அம்சங்கள் மூலம் நீங்கள் பின்வருபவற்றைச் செய்யலாம்:

    1. வரைபடங்களைப் பார்ப்பது, அவற்றில் குறிப்பைச் சேர்ப்பது;

    2. KML கோப்புகள் மற்றும் வரைபட லேயர்களை உருவாக்குதல்;

    3. ஆன்லைன், வீடியோ மற்றும் அச்சுப்பிரதியில் சரியான நன்றிகூறுதலுடன் பொதுவில் உள்ளடக்கத்தைக் காட்சிப்படுத்துதல்; மற்றும்

    Google Maps/Google Earth மூலம் நீங்கள் செய்ய அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட விஷயங்கள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு, Google Maps, Google Earth மற்றும் ’வீதிக் காட்சியைப்’ பயன்படுத்துதல் தொடர்பான அனுமதிகள் பக்கத்தைப் பார்க்கவும்.

  2. தடைசெய்யப்பட்ட நடத்தை. இந்தப் பிரிவு 2 உடன் நீங்கள் இணங்குவது, பிரிவு 1 இல் வழங்கிய உரிமத்தின் நிபந்தனையாகும். Google வரைபடம்/Google எர்த்தைப் பயன்படுத்தும் போது, இவற்றைச் செய்யக்கூடாது (அல்லது உங்களின் சார்பாக இவற்றைச் செய்ய அனுமதிக்கக்கூடாது):

    1. Google வரைபடம்/Google எர்த்தை வேறொருவருக்குக் கொடுத்தல் அல்லது விற்பனை செய்தல், அல்லது Google வரைபடம்/Google எர்த் அடிப்படையில் புதிய தயாரிப்பு அல்லது சேவையை உருவாக்குதல் (Google வரைபடம்/Google எர்த் APIகளை அவற்றின் சேவை விதிமுறைகளுடன் பயன்படுத்தும் போது இது பொருந்தாது);

    2. உள்ளடக்கத்தை நகலெடுத்தல் ("நியாயமான பயன்பாடு" உட்பட அனுமதிகள் பக்கத்தில் உள்ள Google வரைபடம், Google எர்த் மற்றும் வீதிக் காட்சியைப் பயன்படுத்துதல் பிரிவில் விவரிக்கப்பட்டிருந்தால் அல்லது பொருத்தமான அறிவுசார் சொத்துரிமைச் சட்டம் அனுமதித்தால் மட்டும் நகலெடுக்கலாம்);

    3. உள்ளடக்கத்தை மொத்தமாகப் பதிவிறக்குதல் அல்லது மொத்தமாக ஊட்டங்களை உருவாக்குதல் (அல்லது அவ்வாறு செய்ய ஒருவரை அனுமதித்தல்);

    4. Google வரைபடம்/Google எர்த்துக்கு மாற்றாக, அல்லது அதற்கு மாற்றான அதேபோன்ற சேவையாகப் பயன்படுத்தும் வகையில் Google வரைபடம்/Google எர்த்தைப் பயன்படுத்தி வரைபடம் தொடர்பான (வரைபடம் அல்லது வழிச்செலுத்துதல் தரவுத்தொகுப்பு, வணிகப் பட்டியல்கள் தரவுத்தளம், அஞ்சல் பட்டியல் அல்லது டெலிமார்க்கேட்டிங் பட்டியல் உட்பட) மற்ற தரவுத்தொகுப்பை உருவாக்குதல் அல்லது மேம்படுத்துதல்;

    5. Android Auto அல்லது காருக்கு அனுப்புதல் போன்ற Google வழங்கும் சில அம்சங்களைத் தவிர நிகழ்நேரச் சேவைகள் அல்லது வாகனத்தின் தானியங்கிக் கட்டுப்பாட்டு அம்சத்திற்காக அல்லது அதனுடன் தொடர்புடைய மற்றவர்களின் தயாரிப்புகள் அல்லது சேவைகளுடன் Google வரைபடம்/Google எர்த்தின் ஏதாவது பாகத்தைப் பயன்படுத்துதல்;

  3. உண்மை நிலவரங்கள்; இடர் கணிப்புகள். Google வரைபடம்/Google எர்த் இன் வரைபடத் தரவு, ட்ராஃபிக், வழிகள் மற்றும் உள்ளடக்கத்தைப் பயன்படுத்தும் போது, உண்மையான நிலவரங்களுக்கும் வரைபடத்தின் முடிவுகள் மற்றும் உள்ளடக்கத்திற்கும் இடையே வேறுபாடுகளைக் காணலாம், அதனால் உங்கள் சொந்த முடிவின் படி உங்களின் சொந்த ரிஸ்க்கில் Google வரைபடம்/Google எர்த்தைப் பயன்படுத்த வேண்டும். உங்கள் நடத்தை மற்றும் அதன் விளைவுகளுக்கு எல்லா நேரங்களிலும் நீங்களே பொறுப்பாவீர்கள்.

  4. Google Maps/Google Earthதில் உள்ள உங்கள் உள்ளடக்கம். Google Maps/Google Earth மூலம் நீங்கள் பதிவேற்றும், சமர்ப்பிக்கும், சேமிக்கும், அனுப்பும் அல்லது பெறும் உள்ளடக்கம் Googleளின் சேவை விதிமுறைகளுக்கு உட்பட்டது. இதில் “உங்கள் உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதற்கான அனுமதி” என்னும் பிரிவில் உள்ள உரிமமும் அடங்கும். நீங்கள் ஃபிரான்ஸில் வசிப்பவராக இருந்தால் Google Searchசில் பொதுவில் கிடைக்கும் உள்ளடக்கத்திற்கு Google Searchசின் கூடுதல் சேவை விதிமுறைகள் பொருந்தும். இருப்பினும், உங்கள் சாதனத்தில் (சாதனத்தில் சேமிக்கப்பட்ட KML ஃபைல் போன்றவை) மட்டுமே இருக்கும் உள்ளடக்கமானது Googleளில் பதிவேற்றப்படவோ சமர்ப்பிக்கப்படவோ இல்லை என்பதால் அந்த உரிமத்திற்கு உட்பட்டதாகக் கருதப்படாது.

  5. அரசு சார்ந்த பயனர்கள். ஓர் அரசாங்க நிறுவனத்தின் சார்பில் எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு, பின்வரும் விதிமுறைகள் பொருந்தும்:

    1. நிர்வாகச் சட்டம்.

      1. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனில் உள்ள நகரம் அல்லது மாநில அரசின் நிறுவனங்களுக்கு, நிர்வாகச் சட்டம் மற்றும் இடம் தொடர்பான உலகளாவிய விதிமுறைகள் பிரிவு பொருந்தாது.

      2. அமெரிக்க அரசின் பெடரல் நிறுவனங்களுக்கு, நிர்வாகச் சட்டம் மற்றும் இடம் தொடர்பான உலகளாவிய விதிமுறைகள் பிரிவானது பின்வருவனவற்றால் முழுமையாக மாற்றப்படும்:

        “சட்டங்களுக்கு இடையேயான முரண்பாடுகளைக் கவனத்தில் கொள்ளாமல் இந்த ஒப்பந்தமானது அமெரிக்காவின் சட்டங்களின் படி நிர்வகிக்கப்படுவதுடன், அதன்படியே அர்த்தம் கொள்ளப்பட்டுச் செயலாக்கப்படும். முழுமையாகப் பெடரல் சட்டம் அனுமதிக்கும் எல்லை வரை: (A) பெடரல் சட்டத்தில் தீர்வு இல்லாத இடத்தில் கலிபோர்னியா மாகாணத்தின் (கலிபோர்னியா சட்ட விதிகளின் முரண்பாடுகளைத் தவிர்த்து) சட்டங்கள் பயன்படுத்தப்படும்; மற்றும் (B) இந்த ஒப்பந்தம் அல்லது சேவைகளில் செய்யப்படும் அல்லது அவற்றுடன் தொடர்புடைய மேல்முறையீடுகள் கலிபோர்னியாவின் சான்டா கிளாரா கவுண்டியின் பெடரல் நீதிமன்றங்களில் வழக்காடப்படும், அத்துடன் சம்மந்தப்பட்ட தரப்பினர் அந்த நீதிமன்றங்களின் அதிகார வரம்பிற்கு இணங்கி நடக்கவும் சம்மதிக்கின்றனர்.”

    2. அமெரிக்க அரசால் கட்டுப்படுத்தப்பட்ட உரிமைகள். அமெரிக்க பெடரல் அரசால் அல்லது அரசிற்காக Google வரைபடம்/Google எர்த்தை அணுகுதல் அல்லது பயன்படுத்துதல் அனைத்தும் சட்ட அறிவிப்புகளில் உள்ள "அமெரிக்க அரசால் கட்டுப்படுத்தப்பட்ட உரிமைகள்" பிரிவின்படி நிர்வகிக்கப்படும்.