நம்பகமான நிபுணரின் உதவியுடன் உங்கள் பிசினஸை அதிகமானோர் பார்க்கும்படி மேம்படுத்துங்கள்

நம்பகமான நிபுணரின் உதவியுடன் உங்கள் பிசினஸை அதிகமானோர் பார்க்கும்படி மேம்படுத்துங்கள்

Watch the film

Link to Youtube Video (visible only when JS is disabled)

வீதிக் காட்சியின் நம்பகமான நிபுணர்கள் என்போர்:

நம்பகமானவர் ஐகான்
  • Street Viewவின் நம்பகமானவர் என்ற பேட்ஜைப் பெற்றவர்கள்
  • ஒவ்வொருவரும் ஐம்பது ஒப்புதல் அளிக்கப்பட்டு வெளியிடப்பட்ட 360 டிகிரி படங்கள் வழங்கிய சிறந்த பங்களிப்பாளர்கள்
  • எங்கள் ஒப்பந்த நிபுணர்களின் பட்டியலில் இடம் பெற்றவர்கள்
  • மார்க்கெட்டிங் நோக்கங்களுக்காக நம்பகமானவர் பிராண்டுக்குச் சொந்தமானவற்றைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டவர்கள்

தொழில்முறை நிபுணரிடமிருந்து என்ன எதிர்பார்க்கலாம்?

பிரபலமடைய விரும்பும் பிசினஸை Google Mapsஸில் அதிகமானோருக்குத் தெரியும்படி செய்யவும் அதைத் தனித்துக் காட்சியளிக்கச் செய்யவும் அனுபவமிக்க Street View பங்களிப்பாளரால் உதவ முடியும். இதில் கலந்துகொள்வதற்கு முன்னர் ஒவ்வொரு தரப்பின் பங்கும் என்ன என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.

பிசினஸ் உரிமையாளர்கள்

  • உங்கள் பிசினஸின் படங்களைச் சேகரிக்க நம்பகமான புகைப்படக் கலைஞரைப் பணியமர்த்தினால் அவரது சேவைத் தரத்திற்கு Googleளால் உத்திரவாதம் அளிக்க முடியாது.
  • படப்பிடிப்பின் விதிமுறைகள், சேவைகள் மற்றும் விலை பற்றிய எல்லாப் பேச்சுவார்த்தைகளும் உங்களுக்கும் புகைப்படக் கலைஞருக்கும் இடையே நடக்கும்.
  • விர்ச்சுவல் உலா, படங்கள் போன்றவற்றுக்கான கட்டணங்களை நம்பகமான புகைப்படக் கலைஞருக்கு நேரடியாகச் செலுத்த வேண்டும். Googleளுக்கோ அதன் மூலமாகவோ கட்டணத்தைச் செலுத்தக்கூடாது.
  • ஏதேனும் சர்ச்சை ஏற்பட்டால் உங்கள் ஒப்பந்த விதிமுறைகளின்படி புகைப்படக் கலைஞருடனோ ஏஜென்சியுடனோ அதைப் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும்.
  • Street Viewவின் நம்பகமான புகைப்படக் கலைஞர் வழங்கிய சேவைகள் தொடர்பான சிக்கல் குறித்துப் புகாரளிக்க விரும்பினால் இந்தப் படிவத்தைப் பூர்த்திசெய்து புகாரளிக்கலாம்.
நம்பகமான நிபுணருடன் Google Street View பிசினஸ் உரிமையாளர் இருக்கும் படம்

Street View சேவைகளைப் பெறுதல்

நம்பகமான நிபுணர்கள் Street View ready தொழில்நுட்பத்தின் உதவியுடன் வீதி வாரியாகப் படங்களை எடுத்து அவற்றை வெளியிடலாம். உங்கள் சமூகங்களில் Street Viewவைப் புதுப்பிக்க இவை உதவும்.

  • புகைப்படக் கலைஞர்களையோ ஏஜென்சிகளையோ Google பணியமர்த்துவதில்லை என்றாலும் சாலைகளின் சமீபத்திய Street View படங்களை வெளியிட பங்களிப்பாளர்களை அனுமதிக்கிறோம். அட்டகாசமான உயர்தரப் படங்களை வழங்கி, தங்களின் நிபுணத்துவத்தை வெளிப்படுத்திய புகைப்படக் கலைஞர்களும் ஏஜென்சிகளும் எங்களின் பிரத்தியேகமான ‘பணி ஏற்கத் தயாராக இருப்போர் பட்டியலில்’ காட்டப்படுவார்கள்.
  • இன்னும் சிறப்பான அனுபவத்தை உங்களுக்கு வழங்கவும் உங்களைச் சுற்றியுள்ள உலகை நீங்கள் கண்டறியவும் உதவுகின்ற படத்தொகுப்பை வழங்குவதற்காக, பல நாடுகளில் பயணிப்பதற்கான முயற்சிகளை Google தொடர்ந்து எடுத்து வருகிறது. எங்கள் சேவை விரைவில் உங்கள் அருகில் வருகிறோமா என்பதை அறிய 'நாங்கள் எங்கே செல்கிறோம்' எனப் பாருங்கள் அல்லது புத்தம்புதிய படத்தொகுப்பை உடனடியாகப் பெற விரும்பினால் நம்பகமான நிபுணரைத் தொடர்புகொள்ளுங்கள்.
கேமராவுடன் இருக்கும் Google Street View நம்பகமான நிபுணர்

உங்கள் பகுதியில் உள்ள நம்பகமான நிபுணரைக் கண்டறியுங்கள்

உங்களுக்கு அருகிலுள்ள நம்பகமான நிபுணரைத் தேடுவதன் மூலம் தொடங்குங்கள்.

ஏஜென்சி நகரம் மின்னஞ்சல் முகவரி தொடர்பு எண்
ஏஜென்சி நகரம் மின்னஞ்சல் முகவரி தொடர்பு எண்

*Street View நம்பகமான திட்டத்திற்குப் புதிதாகப் பதிவுசெய்யும் செயல்முறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.